இந்தியா திரும்பிய பிறகு, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் ஹார்திக் பாண்டியா: கவலைப்படும் தந்தை!

ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. எந்த தொலைப்பேசி அழைப்புகளுக்கும்...
இந்தியா திரும்பிய பிறகு, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் ஹார்திக் பாண்டியா: கவலைப்படும் தந்தை!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு விசாரணை முடியும் வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது பிசிசிஐ. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் நியூஸிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறமுடியாத நிலைமை இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பண்டிகை சமயத்தில் வீட்டில் இருந்தும் வெளியே வரமால் இருக்கிறார் என்று கவலையுடன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார் பாண்டியாவின் தந்தை ஹிமான்ஸு. இதுகுறித்து அவர் பேட்டியில் கூறியதாவது: நேற்றைய இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டத்தை பாண்டியா பார்த்தார். ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பிய பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. எந்த தொலைப்பேசி அழைப்புகளுக்கும் பதிலளிப்பதில்லை. அவர் ஓய்வில் உள்ளார். பண்டிகை சமயம் என்பதால் குஜராத்தில் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால் பாண்டியா வெளியே வந்து பட்டம் எதுவும் பறக்க விடவில்லை. பட்டம் பறக்க விட அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கிரிக்கெட் ஆட்டங்களில் இடம்பெறுவதால் அவரால் திருவிழா சமயங்களில் வீட்டில் இருக்கமுடியாது. இந்தமுறை அவர் வீட்டில் இருந்தும் மோசமான நிலைமை காரணமாக பண்டிகையைக் கொண்டாவில்லை. 

வீட்டில் இந்த சர்ச்சை குறித்து யாரும் பாண்டியாவிடம் பேசவில்லை. அவருடைய அண்ணன், கிருனால் பாண்டியாவும் காஃபி வித் கரண் நிகழ்ச்சி குறித்து பாண்டியாவிடம் பேசவில்லை. நாங்கள் பிசிசிஐயின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் பேசிய விதம் குறித்தும் தன் மீது விதிக்கப்பட்ட தடை குறித்தும் அவர் மிகவும் வருத்தத்தில் உள்ளார். மீண்டும் அதுபோன்ற ஒரு தவறை செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com