Enable Javscript for better performance
இந்தியாவுடன் ஒருநாள் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவுடன் ஒருநாள் தொடர்: நியூஸிலாந்து அணி அறிவிப்பு

    By DIN  |   Published on : 17th January 2019 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    symp


    இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    ஆஸி. சுற்றுப்பயணம் முடிந்ததும், இந்திய அணி 5 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. கிரிக்கெட் நியூஸிலாந்து அமைப்பு இதற்காக காலின் டி கிராண்ட்ஹோம், டாம் லத்தம், மிச்செல் சான்டெரை திரும்ப அழைத்துள்ளது.
    முதல் 3 ஆட்டங்களுக்கான 14 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசி உலகக் கோப்பைக்கு தயாராகவும், இந்தியாவுடன் பிரம்மாண்டமான இந்த தொடர்களை வெல்லவும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது என பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார்.
    அணி விவரம்: கேன் வில்லியம்ஸன் (கேப்டன்), டிரென்ட் பெளல்ட், டக் பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், லாக்கி பெர்குஸன், மார்ட்டின் கப்டில்,, மேட் ஹென்றி, டாம் லத்தம், காலின் மன்றோ, ஹென்றி நிக்கோல்ஸ், மிச்செல் சான்டெர், ஐஷ் சோதி, டிம் செளதி, ராஸ் டெய்லர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai