ஆஸி. ஓபன்: மூன்றாம் சுற்றில் பெடரர், நடால்

ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், மரின் சிலிக், மகளிர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்லோன் ஸ்டீபென்ஸ்,
ஆஸி. ஓபன்: மூன்றாம் சுற்றில் பெடரர், நடால்


ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுக்கு நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், மரின் சிலிக், மகளிர் பிரிவில் கரோலின் வோஸ்னியாக்கி, ஸ்லோன் ஸ்டீபென்ஸ், ஏஞ்சலிக் கெர்பர் முன்னேறியுள்ளனர்.
20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான பெடரர் தற்போது 7-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். முதல் சுற்றில் டெனிஸ் இஸ்டோமினை வீழ்த்திய அவர், இரண்டாம் சுற்றில் 7-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் டேன் இவான்ஸை போராடி வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். 2 மணி நேரம் 35 நிமிடங்கள் போராடி இந்த வெற்றியைப் பெற்றார்.
கெவின் ஆண்டர்சன் அதிர்ச்சித் தோல்வி
முழங்கை வலியால் அவதிப்பட்டு வரும் உலகின் 5-ஆம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சன் 4-6, 6-4, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் அமெரிக்க இளம் வீரர் பிரான்ஸஸ் டியாபோவிடம் 2-ஆம் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
2-ஆம் நிலை வீரர் நடால் 6-3. 6-2 6-2 என்ற செட் கணக்கில் எப்டனை வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னறினார். 
லியாண்டர் பயஸ் வெளியேற்றம்: ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-மெக்ஸிகன் ரெயஸ் வரேலா இணை 5-7, 6-7, என்ற செட்கணக்கில் ஆஸ்டின்-ஆர்டெம் இணையிடம் தோல்வியுற்று வெளியேறினர். இந்தியாவின் போபண்ணா--தி விஜ் சரண், ஜீவன் நெடுஞ்செழியன்-மன்ரோ இணைகளும் முதல் சுற்றில் தோல்வியுற்றன.
மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், வோஸ்னியாக்கி, பெட்ரா விட்டோவா, ஸ்லோன் ஸ்டீபன்ஸும் முன்னேறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com