சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டி: நாளை தொடக்கம்

டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிகள் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல்

டாக்டர் மகாலிங்கம் கோப்பைக்கான சென்னை ஓபன் சர்வதேச செஸ் போட்டிகள் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.
ரஷிய கிராண்ட்மாஸ்டர் அலெக்சாண்டர் பெட்கே முதல்நிலை வீரராக உள்ளார். மேலும் ரஷிய கிராண்ட்மாஸ்டர்கள் இவான் ரோஸும், இவான் போபோவ் அவருக்கு சவாலை ஏற்படுத்துவர். 14 நாடுகளில் இருந்து வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்பர். 21 கிராண்ட்மாஸ்டர்கள், 28 சர்வதேச மாஸ்டர்கள், 2 பெண் கிராண்ட்மாஸ்டர்கள், 5 பெண் சர்வதேச மாஸ்டர்கள் பங்கேற்பர். இந்தியாவில் இருந்து கிராண்ட்மாஸ்டர்கள் எரிகேஸி அர்ஜுன், தீபன் சக்கரவர்த்தி, எம்.ஆர்.வெங்கடேஷ், சுந்தரராஜன் கிடாம்பி, லஷ்மண், நிலோட்பல் தாஸ், கார்த்திக் வெங்கட்ராமனும் பங்கேற்கின்றனர். தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில் நடைபெறும் இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.15 லட்சமாகும். முதலிடம் பெறுவோர் ரூ.3 லட்சம், கோப்பையும், இரண்டாம் இடம் பெறுபவர் ரூ.2 லட்சமும் பரிசாக பெறுவர். 10 ரவுண்டு அடிப்படையில் போட்டிகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com