பதவி விலகினார் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தோல்வி எதிரொலியாக தனது பதவியை ராஜிநாமா செய்தார் இந்திய அணியின்தலை பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்.
பதவி விலகினார் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி தோல்வி எதிரொலியாக தனது பதவியை ராஜிநாமா செய்தார் இந்திய அணியின்தலை பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன்.
ஐக்கிய அரபு நாடுகளில் ஏஎஃப்சி கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தாய்லாந்தை 4-1 என்ற இந்திய அணி, அடுத்து யுஏஇ, பஹ்ரைன் அணிகளிடம் தோல்வியுற்று வெளியேறியது. 
சிறப்பாக ஆடியும் இந்திய அணி வெளியேறியது, கால்பந்து வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் பதவி விலகியுள்ளார்.
அவர் கூறியதாவது-கடந்த 2015 முதல் 4 ஆண்டுகளாக இங்கு பயிற்சி அளித்தேன். ஆசிய கோப்பைக்கு இந்தியா தகுதி பெற வேண்டும் என உழைத்தோம். அதுபோல் தகுதி பெற்று, சில சாதனைகளையும் படைத்தோம். இதில் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com