ஆஸி. ஓபன்:  நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கியை வீழ்த்தினார் ஷரபோவா

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா.
வெற்றி மகிழ்ச்சியில் மரியா ஷரபோவா.
வெற்றி மகிழ்ச்சியில் மரியா ஷரபோவா.


ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் நடப்பு சாம்பியன் கரோலின் வோஸ்னியாக்கியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார் ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் சுற்று ஆட்டத்தில் 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஷரபோவா- வோஸ்னியாக்கியை எதிர்கொண்டார். 6-4, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வோஸ்னியாக்கியை வீழ்த்தி 4-ஆம் சுற்றுக்கு முன்னேறினார். அடுத்த ஆட்டத்தில் ஆஸி. வீராங்கனை ஆஸ்லி பார்ட்டியை எதிர்கொள்கிறார் ஷரபோவா.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர் 6-2, 7-5, 6-2 என நேர் செட்களில் அமெரிக்காவின் டெய்லர்ரிட்ஸை வீழ்த்தினார். ரபேல் நடால், மரின் சிலிக், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், தாமஸ் பெர்டிச், ஆகியோரும் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
அதே நேரத்தில் மகளிர் பிரிவில் முன்னாள் சாம்பியன் ஏஞ்சலீக் கெர்பர், 17 வயது வீராங்கனை அமன்டா அனிஸிமோவா ஆகியோரும் நான்காம் சுற்றுக்கு முன்னேறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com