மலேசிய மாஸ்டர்ஸ்: மலேசிய மாஸ்டர்ஸ்

மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் நúஸாமி ஒகுராவை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மலேசிய மாஸ்டர்ஸ்: மலேசிய மாஸ்டர்ஸ்


மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனை ஜப்பானின் நúஸாமி ஒகுராவை வீழ்த்தி இந்தியாவின் சாய்னா நெவால் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் 7ஆம் நிலை வீராங்கனையான சாய்னா முதல் கேமில் 9-15 எனவும், இரண்டாம் கேமில் 14-18 என பின்தங்கி இருந்தார். எனினும் தொடர்ந்து கடுமையாக போராடி 21-18, 23-21 என்ற கேம் கணக்கில் ஒகுராவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
கரோலினா மரினுடன் மோதல்:
கடந்த 2017-இல் இப்போட்டியில் பட்டம் வென்றிருந்த சாய்னாவுக்கு அரையிறுதியில் கடும் சவால் உள்ளது. உலக சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொள்கிறார். மரின் 10 முறையும், சாய்னா 5 முறையும் வென்றுள்ளனர்.
ஆடவர் பிரிவில் இந்திய நட்சத்திரம் கிடாம்பி ஸ்ரீகாந்த் 23-21, 16-21, 17-21 என கொரிய வீரர் சன் வேன் ஹோவிடம் போராடி தோற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com