தோனியின் கேட்சை கோட்டை விட்டதால் ஒருநாள் தொடரையே இழந்தோம்

தோனியின் கேட்சை இரண்டு முறை தவற விட்டதால், ஒரு நாள் தொடரையே இழந்ததாக ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

தோனியின் கேட்சை இரண்டு முறை தவற விட்டதால், ஒரு நாள் தொடரையே இழந்ததாக ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் ஆஸி. அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இந்திய அணி முதன்முறையாக ஒரு நாள் தொடரையும் 2-1 என கைப்பற்றியது. இதில் மூத்த வீரர் தோனி 87 ரன்களையும், கேதர் ஜாதவ் 61 ரன்களையும் விளாசி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
2 முறை கேட்ச் கோட்டை விட்ட ஆஸி.: தோனி மைதானத்துக்கு வந்தவுடனே அடித்த பந்தை, கிளென் மேக்ஸ்வெல் தவறவிட்டார். அப்போது ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார் தோனி. பின்னர் அதிரடியாக ஆடினார். பின்னர் 74 ரன்கள் எடுத்திருந்த போது, அடித்த ஷாட்டை ஆரோன் பின்ச் தவற விட்டார். இருமுறை கேட்ச்களை ஆஸி. அணி தவற விட்ட நிலையில் தோனி 87 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதுதொடர்பாக பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில்: 2 முறை தோனியின் கேட்ச்களை தவறவிட்டதால், நாங்கள் பெரிய விலையை தர நேரிட்டது. தொடரையே இழந்தோம். மேலும் இளம் வீரர்கள் ரன் சேஸின் போது என்ன செய்ய வேண்டும் என தோனி கற்பித்தார். சிறந்த வீரர்களுக்கு நாம் வாய்ப்புகளை தரக்கூடாது. 49-ஆவது ஓவர் வரை தோனி ஆடினார். இது எங்களுக்கு பெரிய பாடம். தோனி சிறந்த பாடத்தை எங்களுக்கு கற்பித்தார். சிறந்த வீரர்களுடன் இணைந்து ஆடுவதே இளம் வீரர்களுக்கு நல்ல அனுபவம் ஆகும். ஆஸி. அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி தான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com