துளிகள்...

வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பாட்மிண்டன் ஆட்டத்தில் கண்டிப்பாக தங்கம் வெல்லும் என தேசிய தலைமைப் பயிற்சியாளர் கோபிசந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாட்மிண்டன் விளையாட்டு அதீத வளர்ச்சி பெற்றுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.


ஐபிஎல் போட்டிகளுக்கு முன்பாக தான் முழு உடல்தகுதி பெற்றுவிடுவேன் என இந்திய இளம் ஓபனர் பிரித்வி ஷா கூறியுள்ளார்.


கணுக்கால் காயம் காரணமாக ஆஸ்திரேலியாவில் முழு சுற்றுப் பயணத்தில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் பிரித்வி. வரும் ஐபிஎல் போட்டிக்கு முன்பு முழு உடல் தகுதி பெற தீவிரமாக பாடுபட்டு வருகிறேன் என திங்கள்கிழமை அவர் தெரிவித்துள்ளார்.


வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக மாட்ரிட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி தன்னை குற்றமற்றவர் என அறிவிக்குமாறு கோரவுள்ளார் பிரபல கால்பந்து நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஏற்கெனவே வரித் துறை அதிகாரிகளுடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்தத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அபுதாபியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து போட்டி ரவுண்டு 16 சுற்றில் ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் சீனா 2-1 என்ற கோல்கணக்கில் தாய்லாந்தை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.


கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்களை தரக்குறைவாக பேசியதாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, இந்திய அணி வீரர்களுக்கு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது தொடர்பான உளவியல் ஆலோசனை பயிற்சி வழங்க பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ) பரிசீலித்து வருகிறது. இந்திய சீனியர், ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணி வீரர்களுக்கு தேசிய கிரிக்கெட் அகாதெமியில் இந்த பயிற்சி தரப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com