ஐசிசி ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​கள் கேப்​ட​னாக கோலி தேர்வு

ஐசிசி ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​க​ளின் கேப்​ட​னாக விராட் கோலி நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.


ஐசிசி ஆண்​டின் டெஸ்ட், ஒரு நாள் அணி​க​ளின் கேப்​ட​னாக விராட் கோலி நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார்.
ஆண்​டு​தோ​றும் ஐசிசி சார்​பில் பல்​வேறு நாடு​க​ளின் சிறந்த வீரர்​களை கொண்ட டெஸ்ட் மற்​றும் ஒரு நாள் அணி​கள் அறி​விக்​கப்​ப​டு​வது வழக்​கம். அதே போல் 2018 ஆம் ஆண்​டுக்​கான அணி​களை அறி​வித்​துள்​ளது ஐசிசி. இவற்​றின் கேப்​ட​னாக கோலி நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார். 
ஒரு நாள் அணி​யில் இந்​தியா, இங்​கி​லாந்​தின் தலா 4 வீரர்​கள் இடம் பெற்​றுள்​ள​னர் டெஸ்ட் அணி​யில் மூன்று இந்​திய வீரர்​கள், நியூ​ஸி​லாந்து வீரர்​க​ளும் இடம் பெற்​றுள்​ள​னர்.
அணி​கள் விவ​ரம்-
​ஐ​சிசி டெஸ்ட் அணி:​
விராட் கோலி (கேப்​டன்), ரிஷப் பந்த், ஜஸ்ப்​ரீத் பும்ரா, (இந்​தியா), டாம் லத்​தம், கேன் வில்​லி​யம்​ஸன், ஹென்றி நிக்​கோல்ஸ் (நியூ​ஸி​லாந்து), திமுத் கரு​ணா​ரத்னே (இலங்கை), ஜேஸன் ஹோல்​டர் (மே.இ.​தீ​வு​கள்), ரபாடா (தென்​னாப்​பி​ரிக்கா), நாதன் லயன் (ஆஸ்​தி​ரே​லியா), முக​மது அப்​பாஸ் (பாகிஸ்​தான்). 
​ஐ​சிசி ஒரு நாள் அணி:​
விராட் கோலி (கேப்​டன்), ரோஹித் சர்மா, குல்​தீப் யாதவ், ஜஸ்ப்​ரீத் பும்ரா (இந்​தியா), ஜானி பேர்ஸ்​டோவ், ஜோரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (இங்​கி​லாந்து), ரஷீத் கான் (ஆப்​கா​னிஸ்​தான்), முஸ்​த​பி​ஸுர் ரஹ்​மான் (வங்​க​தே​சம்).
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com