ரொனால்​டோ​வுக்கு ரூ.152 கோடி அப​ரா​தம்

வரி ஏய்ப்பு புகா​ரில் சிக்​கிய பிர​பல கால்​பந்து வீரர் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வுக்கு மாட்ரிட் நீதி​மன்​றம் ரூ.152 கோடி அப​ரா​தம் விதித்​தது.
ரொனால்​டோ​வுக்கு ரூ.152 கோடி அப​ரா​தம்


வரி ஏய்ப்பு புகா​ரில் சிக்​கிய பிர​பல கால்​பந்து வீரர் கிறிஸ்​டி​யானோ ரொனால்​டோ​வுக்கு மாட்ரிட் நீதி​மன்​றம் ரூ.152 கோடி அப​ரா​தம் விதித்​தது.
ரியல் மாட்ரிட் அணி​யில் விளை​யா​டிய கால​கட்​டத்​தில் ரொனால்டோ தனக்கு கிடைத்த உண்​மை​யான வரு​வாயை மறைத்து வரி ஏய்ப்​பில் ஈடு​பட்​டார் என ஸ்பெ​யின் வரு​மான வரித்​துறை அதி​கா​ரி​கள் குற்​றம் சாட்டி​னர். இது​தொ​டர்​பாக மாட்ரிட் நீதி​மன்​றத்​தில் வழக்கு விசா​ரணை நடந்​தது. வரி ஏய்ப்பு புகார் நிரூ​பிக்​கப்​பட்ட நிலை​யில் ரொனால்டோ தரப்​புக்​கும், வரித்​துறை அதி​கா​ரி​க​ளுக்​கும் இடையே ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. 23 மாதங்​கள் சிறைத் தண்​ட​னை​யில் இருந்து தப்​பிக்​கும் வித​மாக அப​ரா​தம் செலுத்த ரொனால்டோ ஒப்​புக் கொண்​டார்.
இது​தொ​டர்​பான விசா​ரணை செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெற்ற நிலை​யில் ரொனால்டோ தனது காதலி ஜார்​ஜி​னா​ரோட்​ரிக்ஸ்​டன் மாட்ரிட் நீதி​மன்​றத்​தில் ஆஜ​ரா​னார்.அங்கு அவர் ரூ,152 கோடி அப​ரா​தம் செலுத்த நீதி​மன்​றம் உத்​த​ர​விட்​டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com