சுடச்சுட

  

  இந்திய அணியின் நேர்மை தன்மை குறித்து பாக். முன்னாள் வீரர்கள் கேள்வி

  By DIN  |   Published on : 02nd July 2019 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  இங்கிலாந்துடன் தோல்வி பெற்ற நிலையில், இந்திய அணியின் போட்டியின் நேர்மை தன்மை குறித்து பாக். முன்னாள் கேப்டன் வக்கார் யூனுஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
  2 முறை சாம்பியன் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றதால், பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பை 
  அந்தரத்தில் வைத்துள்ளது. 
  தொடர்ந்து 5 ஆட்டங்களில் வென்ற இந்தியா, ஆறாவதாக இங்கிலாந்துடன் வென்று விடும். இதன் மூலம் தங்கள் அரையிறுதி வாய்ப்பு பலப்படும் என பாகிஸ்தான் தரப்பு எதிர்பார்த்திருந்தது. ஆனால் இந்தியா முதல் தோல்வியை பெற்றதால், பாக். வாய்ப்பு மங்கி விட்டது.
  இதுதொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) 
  வக்கார் யூனுஸ் பதிவிட்டுள்ளதாவது: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் என்ன செய்கிறீர்களோ அது நீங்கள் யார் என்பதை வெளிப்படுத்தும். பாக். அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதோ அல்லது வெளியேறுவதோ பற்றி நான் கவலை கொள்ளவில்லை. ஆனால் சில சாம்பியன் வீரர்களின் நேர்மை தன்மை கேள்விக்கு இடம் தரும் வகையில் உள்ளது. இதில் அவர்கள் மோசமாக செயல்பட்டனர் என்றார்.
  இதே போல் முன்னாள் வீரர்கள் பாசித் அலி, சிக்கந்தர் பக்த் ஆகியோர் கூறுகையில், அரையிறுதியில் பாக். நுழையக் கூடாது என்பதற்காகவே, இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இந்தியா என சாடியுள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai