தோனியின் மந்தமான ஆட்டத்துக்கு கண்டனம்

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மந்தமாக ஆடியதற்கு முன்னாள் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.
தோனியின் மந்தமான ஆட்டத்துக்கு கண்டனம்


இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மந்தமாக ஆடியதற்கு முன்னாள் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் சாடியுள்ளனர்.
பர்மிங்ஹாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்த இந்தியா, இந்த உலகக் கோப்பையில் முதல் தோல்வியை பெற்றது. ரோஹித் சர்மா, கேப்டன் கோலி ஆகியோர் சிறப்பாக ஆடினாலும், மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பியதால், தோல்வி கிட்டியது.தோனி 31 பந்துகளில் 42 ரன்களையும், கேதார் 13 பந்துகளில் 12 ரன்களையும் எடுத்தனர். 
செளரவ் கங்குலி:  அப்போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி: தோனியின் பேட்டிங் முறை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பேட்டிங் தொடர்பாக விளக்கம் தர ஏதுமில்லை. ஏன் ஒற்றை இலக்க ரன்களை எடுத்தனர் என்பது குறித்து எதுவும் கூற முடியாது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தும், மனதளவில் எந்த நோக்கமும் இல்லாமல் ஆடியுள்ளனர். பந்து எங்கு பிட்சில் பட்டு வந்தாலும், பவுண்டரியாக மாற்ற உறுதியாக இருந்திருக்க வேண்டும்.
நாசர் ஹூசைன் (இங்கிலாந்து முன்னாள் கேப்டன்): இந்திய அணியினர் போனால் போகிறது என்ற வகையில் கடைசி கட்டத்தில் ஆடினர்.
இது ரசிகர்களுக்கு பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கும். என்ன நடைபெற்றது அங்கே, தோனியிடம் இருந்து பெரிய ஷாட்களையே ரசிகர்கள் எதிர்நோக்கினர். சில ரசிகர்கள் மைதானத்தை விட்டு செல்லத் தொடங்கி விட்டனர்.
நாசர் ஹூசைன் கருத்தையே இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கரும் ஆமோதித்துள்ளார். கடைசி சில ஓவர்களில் தோனியின் பேட்டிங் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என சுட்டுரையில் (டுவிட்டர்) கூறியுள்ளார் மஞ்ச்ரேக்கர்.
கோலி ஆதரவு:  தோனியின் பேட்டிங் முறைக்கு கேப்டன் கோலி ஆதரவு தந்துள்ளார். அவர் கூறியதாவது: ஆட்ட முடிவில் பிட்ச் மிகவும் மெதுவாக இயங்கும் தன்மைக்கு மாறி விடும். இதனால் பேட்ஸ்மேன்களால் பெரிய ஷாட்களை அடிக்க முடியாது. தோனி உண்மையிலேயே பவுண்டரியை அடிக்க முயற்சித்தார் ஆனால் முடியவில்லை. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் பந்துவீசியதால், பந்தும் மேலே செல்லாமல் நின்றது. ஆட்ட முடிவில் பேட்டிங் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது என்றார்.
மேலும் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும் தோனிக்கு ஆதரவாக கருத்து கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com