சுடச்சுட

  

  சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஷகிப் அல் ஹசன்!

  By Raghavendran  |   Published on : 06th July 2019 01:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Shakib_Al_Hasan

   

  2019 உலகக் கோப்பைத் தொடரின் சிறந்த வீரர்களில் ஒருவராக வங்கதேசத்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் திகழ்கிறார். நடப்பு தொடரில் லீக் சுற்றுகளுடன் வங்கதேச அணி வெளியேறினாலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல் 600 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.

  இதன்மூலம் லீக் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார். முன்னதாக 2003 உலகக் கோப்பையில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் குவித்துள்ளார். இதுவே இன்றுவரை சாதனையாக தொடர்கிறது.

  ஆனால், 2003 உலகக் கோப்பை லீக் போட்டிகளில் சச்சின் 586 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 2019 உலகக் கோப்பை லீக் போட்டிகளில் ஷகிப் அல் ஹசன் 606 ரன்கள் குவித்து புதிய சாதனைப் படைத்தார். ஒரே உலகக் கோப்பைத் தொடரில் 7 அரைசதங்கள் கடந்து அதிலும் சச்சின் சாதனையை சமன் செய்தார்.

  மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேடன் ஆகியோருக்கு அடுத்து உலகக் கோப்பையில் 600 ரன்களுக்கு மேல் குவித்த 3-ஆவது வீரராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

  அதுமட்டுமல்லாமல் ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 600 ரன்களுக்கு மேல் குவித்தும், 10 விக்கெட்டுகளும் வீழ்த்திய முதல் ஆல்-ரவுண்டராகத் திகழ்கிறார்.

  இலங்கையின் குமார் சங்ககாராவுக்கு அடுத்ததாக உலகக் கோப்பை போட்டிகளில் மொத்தம் 12 அரைசதங்கள் எடுத்த வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai