உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா-நியூஸிலாந்து, இங்கிலாந்து-ஆஸ்திரேயா மோதல்

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா-நியூஸிலாந்து, இங்கிலாந்து-ஆஸ்திரேயா மோதல்

2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டி முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸிலாந்து, இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸி.-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
 கடந்த மே மாதம் 23-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் 12-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பட்டம் வெல்லும் அணிகளாக ஆஸி, இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் உள்ளிட்ட அணிகள் கருதப்பட்டன. இதில் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் வெளியேறின.
 இலங்கையை கடைசி ஆட்டத்தில் வீழ்த்திய இந்தியா 15 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது. அதே நேரம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் தோல்வியுற்று இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.
 இங்கிலாந்தை தவிர்க்க முயற்சி: இந்த உலகக் கோப்பை தொடரிலேயே இங்கிலாந்துடன் மட்டுமே தோல்வியைத் தழுவியது இந்தியா.
 தற்போது மீண்டும் எழுச்சியுடன் காணப்படும் இங்கிலாந்து அணி நியூஸிலாந்தையும் வீழ்த்தி பட்டியலில் 3-ஆவது இடத்தில் உள்ளது.
 இதனால் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதை தவிர்க்க இந்தியா, ஆஸி. அணிகள் கருதின.
 இந்நிலையில் பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற இந்தியா நான்காவது இடத்தில் உள்ள நியூஸிலாந்துடன் மோதுகிறது.
 அதே நேரத்தில் ஆஸி.யும்-இங்கிலாந்தும் மோதுகின்றன.
 வரும் செவ்வாய்க்கிழமை மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதியில் இந்தியா-நியூஸி அணிகளும், வியாழக்கிழமை பர்மிங்ஹாமில் நடைபெறும் 2-ஆவது அரையிறுதியில் ஆஸி.-இங்கிலாந்து மோதுகின்றன.
 ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாகவும், இந்தியா 3-ஆவது முறையாகவும், இங்கிலாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை முதன்முறையாகவும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற தீவிரமாக உள்ளன.
 இந்தியா

தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்திலும் (டிஎல்எஸ் முறை), ஆப்கானிஸ்தானை 11 ரன்கள் வித்தியாசத்திலும், மே.இ.தீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. தோல்வி: இங்கிலாந்துக்கு எதிராக 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
 நியூஸிலாந்துடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
 நியூஸிலாந்து

இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 2 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், தென்னாப்பிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இ.தீவுகளை 5 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது.
 தோல்வி: பாகிஸ்தானிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆஸி.யிடம் 86 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்திடம் 119 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியுற்றது.
 ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மே.இ.தீவுகள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டன.
 இங்கிலாந்து


 தென்னாப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 106 ரன்கள் வித்தியாசத்திலும், மே.இ.தீவுகளை 8 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்திலும், நியூஸிலாந்தை 119 ரன்கள் வித்தியாசத்திலும், இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது.
 தோல்வி: இலங்கையிடம் 20 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானிடம் 14 ரன்கள் வித்தியாசத்திலும், ஆஸ்திரேலியாவிடம் 64 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தது.
 ஆஸ்திரேலியா

ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், மே.இ.தீவுகளை 15 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 41 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 48 ரன்கள் வித்தியாசத்திலும், இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது.
 தோல்வி: இந்தியாவிடம் 36 ரன்கள்
 வித்தியாசத்திலும், தென்னாப்பிரிக்காவிடம் 10 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வி அடைந்தது.
 
 -பா. சுஜித் குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com