தோனியின் 38-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் 

உலகக் கோப்பை போட்டியின் இடையே லீட்ஸில் ஞாயிற்றுக்கிழமை தனது 38-ஆவது பிறந்த நாளை மனைவி சாக்ஷி, மகள் ஸிவா மற்றும் சக வீரர்களுடன் கொண்டாடினார் தோனி.
தோனியின் 38-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம் 

உலகக் கோப்பை போட்டியின் இடையே லீட்ஸில் ஞாயிற்றுக்கிழமை தனது 38-ஆவது பிறந்த நாளை மனைவி சாக்ஷி, மகள் ஸிவா மற்றும் சக வீரர்களுடன் கொண்டாடினார் தோனி.
 இலங்கையுடன் சனிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐசிசி ஒருநாள், டி20 உலகக் கோப்பை,சாம்பியன்ஸ் கோப்பை என மூன்று முக்கிய போட்டிகளில் பட்டம் வென்ற கேப்டன் என்ற சிறப்பை பெற்ற தோனிக்கு ஞாயிற்றுக்கிழமை 38-ஆவது பிறந்த நாளாகும்.
 மனைவி சாக்ஷி, மகள் ஸிவா மற்றும் சக வீரர்கள் ஹார்திக் பாண்டியா, கேதார் ஜாதவ் ஆகியோருடன் பிறந்த நாளை கொண்டாடினார் தோனி.
 தந்தைக்கு ஸிவா பிறந்த நாள் வாழ்த்து கூறும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
 இந்த உலகக் கோப்பையில் 7 ஆட்டங்களில் தோனி மொத்தமாக இதுவரை 223 ரன்களை சேர்த்துள்ளார்.
 தோனி தற்போது தனது 4-ஆவது ஒருநாள் உலகக் கோப்பையில் ஆடி வருகிறார்.
 விரேந்திர சேவாக் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: தோனியின் பிறந்த தேதி, மாதம், விளையாட்டுச் சீருடை அனைத்தின் எண்ணும் 7 தான். 7 கண்டங்கள், வாரத்தில் 7 நாள்கள், வானவில்லில் 7 வண்ணங்கள், 7 அடிப்படை இசை குறிப்புகள், 7 சக்கரங்கள், 7 உலக அதிசயங்கள் என அவரது பிறந்த நாளும் கிரிக்கெட் உலகின் அதிசயமாக திகழ்கிறது என பாராட்டி உள்ளார்.
 சச்சின் டெண்டுல்கர், பாண்டியா, விவிஎஸ்.லஷ்மண், முகமது கைப், அஸ்வின், ரஹானே, ஹர்பஜன், ரிஷப் பந்த் உள்ளிட்டோரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com