சுடச்சுட

  

  இன்று மழைக்கு வாய்ப்பில்லை? விட்ட இடத்தில் தொட்ட குறையாக அரையிறுதி!

  By Raghavendran  |   Published on : 10th July 2019 02:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  manchester

   

  இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. லீக் ஆட்டங்களுக்கு அமைக்கப்பட்ட பிட்சில் ஆட்டம் நடத்தப்படாமல், அரையிறுதிக்காக அமைக்கப்பட்ட புதிய பிட்சில் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

  1 ரன்னுடன் தடுமாறிக் கொண்டிருந்த கப்டில், பும்ரா பந்துவீச்சில், கோலியிடம் கேட்ச் தந்து அவுட்டானார். 28 ரன்கள் எடுத்திருந்த நிக்கோல்ஸை போல்டாக்கினார் ரவீந்திர ஜடேஜா. 

  ராஸ் டெய்லர், கேப்டன் கேன் வில்லியம்ஸனுடன் இணைந்து ஸ்கோரை மெதுவாக உயர்த்தினர். 95 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 67 ரன்களை எடுத்திருந்த கேன் வில்லியம்ஸன், சஹல் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் தந்து அவுட்டானார். ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் 16 ரன்களுடன் ஹார்திக் பாண்டியா பந்திலும், கிராண்ட்ஹோம் 16 ரன்களுடன் புவனேஷ்வர் பந்திலும் வெளியேறினர்.

  ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், டாம் லத்தம் 3 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது மான்செஸ்டர் நகரில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால், ஆட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்வதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் போனது. 

  இதனால் செவ்வாய்க்கிழமை ஆட்டம் முடிவுற்ற இடத்தில் இருந்தே, மாற்று நாளான புதன்கிழமை மீண்டும் தொடங்கி நடைபெறவுள்ளது. நியூஸிலாந்து அணி 211/5 என்ற நிலையில் மீண்டும் அதில் இருந்தே ஆடத் தொடங்கும். அதன் பின்னர் இந்தியா 50 ஓவர்கள் முழுமையாக ஆடவுள்ளது.

  தற்போது அங்கு மழைக்கான அறிகுறி தென்படவில்லை. மேலும் இந்த நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று கணிக்கப்பட்டுள்ளது. மைதானமும் தயாராக உள்ளது. போதிய வெளிச்சமும் இருப்பதால் விட்ட இடத்தில் இருந்து தொட்ட குறையாக இந்த அரையிறுதி ஒருவழியாக முழுமையாக அரங்கேறும் என்று நம்பப்படுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai