சுடச்சுட

  
  aus

  உலகக்கோப்பை கிரிக்கெட் தொரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறது.

  2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் பர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையே நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வென்று இங்கிலாந்து தனது முதல் உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

  உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா 9 ஆட்டங்களில் 7 வெற்றி, 2 தோல்வி என 14 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து அணி 9 ஆட்டங்களில் 6 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.  பட்டியலில் முதலிடத்தை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா கடைசி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவுடன் 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.  

  இதனால் 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுவதை தவிர்க்க வேண்டும் என நினைத்த ஆஸி. அணியின் நோக்கம் நிறைவேறாமல் போனது. 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், முதன்முறையாக பட்டத்தை வெல்லும் தீவிரத்தில் இங்கிலாந்தும் இன்று களமிறங்குகின்றன. 

  பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானம், இங்கிலாந்துக்கு சாதகமாகவும், அதே நேரம் ஆஸ்திரேலிய அணிக்கு ராசியில்லாத மைதானமாகவும் திகழ்கிறது. குறிப்பாக கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானத்தில் ஆஸி.க்கு எதிராக ஒருநாள் ஆட்டங்களில் இங்கிலாந்து தோல்வியே கண்டதில்லை. இந்த மரபை ஆஸி. மாற்ற போராடும். இ்ன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai