சுடச்சுட

  

  ஏலத்தில் விடப்பட்ட போரீஸ் பெக்கரின் பொருள்கள்: ரூ. 5.84 கோடி கிடைத்தது!

  By எழில்  |   Published on : 12th July 2019 02:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  boris_beckerxx

   

  17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற சாதனைக்குரியவர் ஜெர்மனியின் போரீஸ் பெக்கர். 3 விம்பிள்டன் பட்டம் உள்பட 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 49 பட்டங்களை வென்றவர். 

  பல்வேறு கடன் பிரச்னைகளில் சிக்கியுள்ள 51 வயது பெக்கர் அவற்றைத் தீர்ப்பதற்காகப் போராடி வருகிறார். கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக தான் விளையாடி பெற்ற கோப்பைகள், பரிசுப்பொருள்களை ஏலத்தில் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

  இந்நிலையில் பெக்கருடைய 82 பொருள்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ரூ. 5.84 கோடி பெக்கருக்குக் கிடைத்துள்ளது. இதில் அவருடைய 1989 யு.எஸ். ஓபன் கோப்பையால் மட்டும் 1 கோடியே 29 லட்சம் கிடைத்துள்ளது. நேற்றுடன் முடிவடைந்த இந்த ஏலத்தில் கிடைத்துள்ள வருவாய் மூலம் பெக்கரின் ஒரு பகுதி கடன்கள் செலுத்தப்படவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai