சுடச்சுட

  

  11 வருடங்கள் கழித்து விம்பிள்டனில் மீண்டும் மோதும் ஃபெடரர் - நடால்!

  By எழில்  |   Published on : 12th July 2019 11:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  federer_nadal_2009

   

  டென்னிஸ் ரசிகர்களால் 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டியை மறக்கமுடியாது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தினார் நடால். 4 மணி நேரம் 48 நிமிடங்களுக்கு அந்த ஆட்டம், டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டம் என்று நிபுணர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டுப்பெற்றது. 

  இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து விம்பிள்டனில் மீண்டும் ஃபெடரர் - நடால் மோதல் இன்று நிகழவுள்ளது. விம்பிள்டனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஃபெடரர், 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரத்தில் நடாலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரமாக உள்ளார்.  2019 விம்பிள்டன் அரையிறுதிச்சுற்றில் களிமண் தரை மன்னனும், புல்தரை மன்னனும் மோதவுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  ஃபெடரரும் நடாலும் 39 முறை மோதி அதில் 24 ஆட்டங்களில் நடாலும் 15 ஆட்டங்களில் ஃபெடரரும் வென்றுள்ளார்கள். விம்பிள்டனில் இருவரும் மூன்று முறை மோதியதில் இரண்டு ஆட்டங்களில் ஃபெடரர் வென்றுள்ளார். இதனால் இன்றைய ஆட்டத்தை நடால் வெல்வதற்கே அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai