ஓரணியாக நாங்கள் செயல்பட தவறி விட்டோம்: ரோஹித் வேதனை
By DIN | Published On : 13th July 2019 01:22 AM | Last Updated : 13th July 2019 01:22 AM | அ+அ அ- |

நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் நாம் ஓரணியாக செயல்பட தவறியதால், எனது மனது கனக்கிறது என துணை கேப்டன் ரோஹித் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.
2019 உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்து புதிய சாதனை புரிந்த ரோஹித், அரையிறுதி ஆட்டத்தில் 1 ரன்னுடன் அவுட்டாகி வெளியேறினார். தொடக்க வரிசை சரிந்ததால், இந்தியாவுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு தோல்வியடைந்தது.
இதுதொடர்பாக ரோஹித் கூறியதாவது:
நாங்கள் ஒழுங்காக ஆடாததால், எனது மனது கனமாக உள்ளது. நாட்டில் இருந்து கிடைத்த ஆதரவு அபரிதமாக இருந்தது. இங்கிலாந்தில் மைதானம் முழுவதும் நீல நிறத்தில் ரசிகர்கள் குவிந்திருந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
கேப்டன் விராட் கோலியும், 45 நிமிடங்கள் மோசமாக ஆடியதால் தோல்வியைத் தழுவினோம் எனக் கூறியிருந்தார்.
எனினும் உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 648 ரன்களுடன் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் ரோஹித்.