தோனியின் ரன் அவுட் திருப்புமுனை
By DIN | Published On : 13th July 2019 01:21 AM | Last Updated : 13th July 2019 01:21 AM | அ+அ அ- |

நிலையாக ஆடி வந்த தோனியை நேரடியாக ரன் அவுட் செய்தது ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது என நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் கப்டில் கூறியுள்ளார்.
அரையிறுதியில் இந்தியாவை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூஸிலாந்து. தோனி 72 பந்துகளில் 50 ரன்களுடன் களத்தில் இருந்த போது, 49-ஆவது ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. 7-ஆவது விக்கெட்டுக்கு தோனி-ஜடேஜா 116 ரன்களை சேர்த்திருந்தனர்.
அப்போது ரன் எடுக்க முயன்ற தோனி அடித்த ஷாட்டை தடுத்த கப்டில் நேரடியாக ஸ்டம்புகளின் மீது பந்தை வீசி ரன் அவுட் செய்தார்.
இதனால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு தோல்வியைத் தழுவியது.
தோனியை ரன் அவுட்டாக்கியது தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என பெருமிதத்துடன் கூறினார் கப்டில்.