Enable Javscript for better performance
24-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்வாரா செரீனா வில்லியம்ஸ்?- Dinamani

சுடச்சுட

    

    24-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாதனையை சமன் செய்வாரா செரீனா வில்லியம்ஸ்?

    By DIN  |   Published on : 13th July 2019 01:18 AM  |   அ+அ அ-   |    |  

    serena-1


    விம்பிள்டன் இறுதிச் சுற்றில் சிமோனா ஹலேப்பை வீழ்த்தி 24-ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனையை சமன் செய்வாரா செரீனா வில்லியம்ஸ் என பெருத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
    கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டுகளின் வரிசையில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது டென்னிஸ் ஆகும். ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகள் டென்னிஸ் உலகின் கிராண்ட்ஸ்லாம் பந்தயங்களாகும். இதில் ஓரே சீசனில் நான்கு பட்டங்களையும் வெல்வது மிகுந்த பெருமைக்குரியதாகும்.
    லண்டனில் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்று ஆட்டம் சனிக்கிழமை முன்னாள் சாம்பியன் செரீனா-ருமேனியாவின் சிமோனா இடையே சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 
    அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான செரீனா வில்லியம்ஸ், இதுவரை ஆஸ்திரேலிய ஓபனில் 7 முறையும், பிரெஞ்சு ஓபனில் 3 முறையும், விம்பிள்டனில் 7 முறையும், யுஎஸ் ஓபனில் 6 முறையும் என மொத்தம் 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக 319 வாரங்கள் இருந்தவர் செரீனா.
    24-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வீராங்கனை  மார்க்ரெட் ஸ்மித் கோர்ட் முன்னாள் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தவர். 
    ஆஸி. ஓபனில் 11 முறையும், பிரெஞ்சு ஓபனில் 5 முறையும், விம்பிள்டனில் 3 முறையும், யுஎஸ் ஓபனில் 5 முறையும் என மொத்தம் 24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சாதனைக்கு உரியவர்.
    சாதனையை சமன் செய்ய முனைப்பு: இந்த சாதனையை சமன் செய்யும் முனைப்பில் உள்ளார் செரீனா வில்லியம்ஸ். மேலும் குழந்தை பிறந்த பின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற நான்காவது டபிள்யுடிஏ வீராங்கனை என்ற சிறப்பையும் பெற உள்ளார்.
    பிரெஞ்சு ஓபன் போட்டியில் தோல்வியுற்றதால், தனது நம்பர் ஒன் அந்தஸ்தை இழந்தார் சிமோனா. எனினும் அவர் செரீனாவுக்கு கடும் சவாலைத் தருவார் எனத் தெரிகிறது.
    கடந்த ஜனவரி மாதம் ஆஸி. ஓபன் போட்டியில் நான்காவது சுற்றில் சிமோனாவை வென்றிருந்தார் செரீனா. 
    கடந்த 2018-ஆம் ஆண்டு செரீனாவுக்கு சோதனையாக அமைந்தது விம்பிள்டன், யுஎஸ் ஓபன் இறுதியில் தோல்வியைத் தழுவி இருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை செரீனா புதிய சாதனையை படைப்பார் எனக் கருதப்படுகிறது.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp