சுடச்சுட

  

  ஃபெடரர் - நடால் மோதிய விம்பிள்டன் ஆட்டத்தைப் பார்க்கத் தவறவிட்டவர்களுக்கு: ஹைலைட்ஸ் விடியோ!

  By எழில்  |   Published on : 13th July 2019 12:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  federer_2019_wimb_(5)

   

  லண்டனில் தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதிச்சுற்றில் ஃபெடரரும் நடாலும் மோதினார்கள்.

  டென்னிஸ் ரசிகர்களால் 2008 விம்பிள்டன் இறுதிப் போட்டியை மறக்கமுடியாது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஃபெடரரை வீழ்த்தினார் நடால். 4 மணி நேரம் 48 நிமிடங்களுக்கு அந்த ஆட்டம், டென்னிஸ் வரலாற்றில் மிகச்சிறந்த ஆட்டம் என்று நிபுணர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டுப்பெற்றது. இந்நிலையில் 11 வருடங்கள் கழித்து விம்பிள்டனில் மீண்டும் ஃபெடரர் - நடால் மோதல் நேற்று நிகழ்ந்தது. விம்பிள்டனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ள ஃபெடரர், 9-ஆவது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அதே நேரத்தில் நடாலும், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட தீவிரமாக இருந்தார். 2019 விம்பிள்டன் அரையிறுதிச்சுற்றில் களிமண் தரை மன்னனும், புல்தரை மன்னனும் மோதியது டென்னிஸ் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

  7-6 (3), 1-6, 6-3, 6-4 என்கிற செட்களில் நடாலை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார் ஃபெடரர். ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மிகவும் பரபரப்பான முறையில் அரையிறுதிச்சுற்று நடைபெற்றது. ஃபெடரரும் நடாலும் இதுவரை 40 முறை மோதி அதில் 24 ஆட்டங்களில் நடாலும் 16 ஆட்டங்களில் ஃபெடரரும் வென்றுள்ளார்கள். விம்பிள்டனில் இருவரும் நான்கு முறை மோதியதில் மூன்று ஆட்டங்களில் ஃபெடரர் வென்றுள்ளார். 

  மற்றொரு அரையிறுதியில் 6-2, 4-6, 6-3, 6-1 என்கிற செட் கணக்கில் ராபர்டோ பெளடிஸ்டாவைத் தோற்கடித்தார் ஜோகோவிச். இதையடுத்து ஞாயிறன்று நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிச்சுற்றில் ஃபெடரரும் ஜோகோவிச்சும் மோதவுள்ளார்கள். 

  ஃபெடரர் - நடால் மோதிய அரையிறுதி ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ: 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai