பி.எஸ்.ஜி. கோப்பை கூடைப்பந்து: சென்னை சுங்க வரித் துறை சாம்பியன்

கோவையில் நடைபெற்று வந்த பி.எஸ்.ஜி. கோப்பைக்கான 6ஆவது மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை சுங்க வரித் துறை அணி
சென்னை சுங்க வரித் துறை அணிக்கு கோப்பையை வழங்குகிறார்  பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பிரகாசன்.
சென்னை சுங்க வரித் துறை அணிக்கு கோப்பையை வழங்குகிறார்  பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் கே.பிரகாசன்.

கோவையில் நடைபெற்று வந்த பி.எஸ்.ஜி. கோப்பைக்கான 6ஆவது மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் சென்னை சுங்க வரித் துறை அணி பட்டம் வென்றது.
பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் கடந்த 8ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில் லீக் முறையில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் அரைஸ் ஸ்டீல்ஸ் அணியையும், திண்டுக்கல் கூடைப்பந்து கிளப் அணியையும் தமிழ்நாடு சிறப்புக் காவல் படை அணி தோற்கடித்து இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றது.
அதேபோல், திண்டுக்கல் கூடைப்பந்து கிளப் அணி, அரைஸ் ஸ்டீல்ஸ் அணியைத் தோற்கடித்த சென்னை சுங்க வரித் துறை அணியும் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றது.
இறுதி ஆட்டத்தில், சென்னை சுங்க வரித் துறை அணி 92 - 74 என்ற புள்ளிகள் கணக்கில் சிறப்புக் காவல் படை அணியைத் தோற்கடித்தது. மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில், அரைஸ் ஸ்டீல்ஸ் அணி 87 - 81 என்ற புள்ளிகள் கணக்கில் திண்டுக்கல் அணியைத் தோற்கடித்தது.
இதையடுத்து பட்டம் வென்ற அணிக்கு பி.எஸ்.ஜி. கோப்பையுடன் ரூ.20 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பிடித்த அணிக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் கே.பிரகாசன், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். உடற்கல்வி இயக்குநர் ஏ.சோமசுந்தரமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com