சுடச்சுட

    

    * சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) அண்மையில் வெளியிட்ட மகளிர் அணிகள் தரவரிசைப் பட்டியலில் இந்திய மகளிரணி 6 இடங்கள் முன்னேறி 57 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆசிய நாடுகளில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது. 
    * வரும் திங்கள்கிழமை முதல் பெங்களூரில் தொடங்கவுள்ள தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்கு 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
    * இந்திய டேக்வாண்டோ சம்மேளனத்தின் நிர்வாகத்தை மேற்கொள்ள இடைக்கால குழுவை (அட்ஹாக்) அமைத்துள்ளது இந்திய ஒலிம்பிக் சங்கம். சம்மேளன செயல்பாடுகளை மேற்கொள்ளவும், புதிய நிர்வாகிகள் தேர்தலை 6 மாதங்களில் நடத்தவும் ஐஓஏ தீர்மானித்துள்ளது. 
    * அபியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் சனிக்கிழமை ஆடவர் 109 கிலோ பிரிவில் 202 கிலோ எடை தூக்கி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார் பர்தீப் சிங். விகாஸ் தாகுர் வெள்ளிப் பதக்கம் வென்றார். பல்வேறு சாதனைகளுடன் இந்தியா மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது.
    * ஜெர்மனியின் சூல் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜூனியர் உலக துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் உதயவீர் சித்து 2 தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் 25 மீ ஸ்டாண்டர்ட் பிஸ்டல் பிரிவில் உதயவீர் தங்கமும், ஆதர்ஷ் சிங், அனிஷ் பன்வாலா முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர். மேலும் உதயவீர், விஜயவீர் சித்து, ஆதர்ஷ் ஆகியோர் அணிகள் பிரிவிலும் தங்கம் வென்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai