டிஎன்பிஎல் இளம் வீரர்களை அதிகம் ஊக்குவிக்கிறது

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) மூலம் மாவட்ட அளவில் அதிக இளம் வீரர்கள் உருவாக்கப்படுகின்றனர் என இந்திய அணி வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
டிஎன்பிஎல் இளம் வீரர்களை அதிகம் ஊக்குவிக்கிறது

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் (டிஎன்பிஎல்) மூலம் மாவட்ட அளவில் அதிக இளம் வீரர்கள் உருவாக்கப்படுகின்றனர் என இந்திய அணி வீரர் விஜய் சங்கர் கூறியுள்ளார்.
 சங்கர் சிமெண்ட் டிஎன்பிஎல் லீக் போட்டி வரும் 19-ஆம் தேதி திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இடையிலானஆட்டத்துடன் தொடங்குகிறது.
 வரும் ஆகஸ்ட் 15 வரை சென்னை, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் 32 ஆட்டங்கள் நடக்கின்றன. 7 முறை ஓரே நாளில் 2 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி மாலை 3.15 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.15 மணிக்கும் தொடங்கும்.
 இந்த ஆண்டு லீக் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 81 வீரர்கள் களம் காணுகின்றனர். டிஎன்பிஎல் 2019 போட்டி குறித்த அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ஆர்.ஐ.பழனி தலைமை தாங்கினார். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எஸ்.பத்ரிநாத், ஹேமங் பதானி, திண்டுக்கல் அணி பயிற்சியாளர் வெங்கட்ரமணா, காரைக்குடி வீரர் யோமகேஷ், லைக்கா பயிற்சியாளர் ஆர்.பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 இந்திய அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் கூறுகையில்: இந்த ஆண்டு டிஎன்பிஎல் லீக் போட்டிக்கு புதிய வீரர்கள் ஏராளமானோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 அனைத்து மாவட்டங்களையும் டிஎன்பிஎல் விரிவாக சென்றடைந்துள்ளது. நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். இவை அனைத்தும் டிஎன்பிஎல் தொடருக்கு கிடைத்த வெற்றி, தமிழக அணிக்கும் தரமான வீரர்கள் எதிர்காலத்தில் தடையின்றி கிடைப்பர் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com