பேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை

அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த கடைசி 10 நிமிடங்கள் குறித்து நினைக்கக் கூடாது என நியூஸிலாந்து ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம் கூறியுள்ளார். 
பேக்கரி கூட வைத்துக்கொள்ளுங்கள், கிரிக்கெட் வேண்டாம்: நியூஸி. ஆல்-ரவுண்டர் வேதனை

அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த கடைசி 10 நிமிடங்கள் குறித்து நினைக்கக் கூடாது என நியூஸிலாந்து ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம் கூறியுள்ளார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி வரை போராடிக்கொண்டிருந்த வீரர்களில் ஜிம்மி நீஷமும் ஒருவர். 

இரு அணிகளும் வெற்றிபெறாத சூழலில் விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி சாம்பியனாக அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஜிம்மி நீஷம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:

இங்கிலாந்து அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் போட்டி மிகவும் காயத்துக்குள்ளாக்கியுள்ளது. எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த கடைசி 10 நிமிடங்கள் குறித்து நினைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணுகிறேன். 

எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. நீங்கள் நினைத்ததை (உலகக் கோப்பை) எங்களால் நிறைவேற்ற இயலவில்லை, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

சிறுவர்களிடம் ஒரேயொரு கோரிக்கையை மட்டும் முன்வைக்கிறேன். பேக்கரி வைப்பது உள்ளிட்ட இதர செயல்களில் கவனம் செலுத்தி மகிழ்ச்சியுடன் வாழ்ந்து முடித்துவிடுங்கள். ஆனால், தயவு செய்து எந்த விளையாட்டையும் தேர்வு செய்துவிடாதீர்கள் என்று வேதனையுடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com