ஏமாற்றத்தை தரும் ஐசிசி பவுண்டரி விதிக்கு கடும் கண்டனம்

ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம், தோல்வியுற்று பட்டத்தை நியூஸிலாந்து இழக்க காரணமாக அதிக பவுண்டரி விதிகளுக்கு
ஏமாற்றத்தை தரும் ஐசிசி பவுண்டரி விதிக்கு கடும் கண்டனம்


ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்திடம், தோல்வியுற்று பட்டத்தை நியூஸிலாந்து இழக்க காரணமாக அதிக பவுண்டரி விதிகளுக்கு முன்னாள், இந்நாள் வீரர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்துக்கு சரிநிகராக ஆடியும், கூடுதல் பவுண்டரி விதியால் பட்டத்தை இழந்தது, நியூஸிலாந்து அணி வீரர்களுக்கு கடும் ஏமாற்றமாக அமைந்தது. நியூஸி. கேப்டன் கேன் வில்லியம்ஸனும் இதற்கு தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் அந்நாட்டு ஊடகங்களும் இந்த விதியை கடுமையாக சாடின.
அதிக பவுண்டரி விதிக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரோஹித் சர்மா: இந்த விதி தற்காலத்துக்கு முற்றிலும் பொருந்தாததாகும். இதுதொடர்பாக தீவிர கவனம் செலுத்த வேண்டும். சில விதிகளை மீண்டும் மறுஆய்வு செய்ய நேரம் வந்துள்ளது.
கெளதம் கம்பீர்: இறுதி ஆட்டத்தில் வெற்றியை யார் அதிக பவுண்டரிகள் அடித்துள்ளார்கள் என்ற விதியின் அடிப்படையில் தீர்மானிப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இரு அணிகளும் கடுமையாக போராடியதால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால் இந்த விதியால் ஒரு அணிக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
யுவராஜ் சிங்: இந்த விதியை முற்றிலும் ஏற்க முடியாது. எனினும் விதிகள் தொடரவே செய்கின்றன. நியூஸிலாந்து அணிக்கு ஏற்பட்ட நிலைக்கு எனது மனதில் வேதனை எழுகிறது. சிறப்பான மறக்க முடியாத இறுதி ஆட்டம்.
ஸ்காட் ஸ்டைரீஸ்: உங்கள் சிறந்த பணி, ஐசிசி அமைப்பே ஒரு நகைச்சுவையாக முடிந்து விட்டது.
பிஷன் சிங் பேடி: இந்த ஐசிசி விதிகள் இங்கிலாந்து பட்டம் வெல்ல உதவியது என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இரு முறையும் ஆட்டம் சமனில் முடிந்ததால், இரு அணிகளையும் கூட்டாக வென்றதாக அறிவித்திருக்கலாம். 
டியான் நாஷ்: இந்த விதியால் முற்றிலும் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். அபத்தமான விதியாக உள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்த விதிகளை வகுத்துள்ளனர் என்பதால் மேலும் எதையும் கூற இயலவிலலை. 
பிரெட் லீ, டீன் ஜோன்ஸ், உள்பட பலரும் இந்த பவுண்டரி விதியை சாடியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com