பந்தை ஓவர் த்ரோவாக எறிந்தது போன்று மீண்டும் நடக்கவே கூடாது: கேன் வில்லியம்ஸன்

பந்தை ஓவர் த்ரோவாக எறிந்தது போன்று மீண்டும் எப்போதும் நடக்கவே கூடாது  என நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் வேதனை தெரிவித்துள்ளார்.
பந்தை ஓவர் த்ரோவாக எறிந்தது போன்று மீண்டும் நடக்கவே கூடாது: கேன் வில்லியம்ஸன்


பந்தை ஓவர் த்ரோவாக எறிந்தது போன்று மீண்டும் எப்போதும் நடக்கவே கூடாது  என நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் வேதனை தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இரு அணிகள் மோதின. இதில் 2 அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் சமனில் முடிந்தது. அதன்பின் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டு அதுவும் சமனில் முடிந்தது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற ஐசிசி விதிகளின்படி இங்கிலாந்து சாம்பியனாக அறிவிக்கப்பட்டது.
தொடக்கம் முதல் கடைசி வரை ஆட்டம் பரபரப்பாக அமைந்தது. 
முதன் முறையாக பட்டம் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியதாவது-
இறுதி ஆட்டம் மிகவும் கடினமாக போராடி வென்றதாகும். நியூஸிலாந்து அணி விடாமல் சவாலை அளித்தனர். லார்ட்ஸ் மைதான பிட்ச் ரன்களை அடிப்பதற்கு மிகவும் கடினமாக அமைந்தது. நாங்கள் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். எனினும் பட்லரும், பென் ஸ்டோக்ஸும் சிறப்பாக இணை சேர்ந்து அணியை மீட்டனர்.
நான்கு ஆண்டுகள் முயற்சி-இந்த வெற்றி எளிதில் கிட்டவில்லை. நான்கு ஆண்டுகளாக அணியை கட்டமைத்து பயிற்சி செய்ததால் கிடைத்த பலன் இதுவாகும் எங்கள் அணியில் வீரர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் இதற்காக கடுமையாக உழைத்தனர். சூப்பர் ஓவரில் ஆடச் சென்ற 2 வீரர்களுக்கும் மிகுந்த பாராட்டுகள் ஆர்ச்சரும் மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சில வீரர்கள் இந்த அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டனர். மொத்தத்தில் உலகமே எங்கள் வசம் கிடைத்துள்ளது என்றார் மோர்கன். 
கேன் வில்லியம்ஸன் (நியூஸி. கேப்டன்): நாங்கள் டாஸ் வென்ற பின் எடுத்த முடிவு குறித்து ஆலோசித்தோம். பிட்ச் மிகவும் வறண்ட நிலையில் காணப்பட்டது. இன்னும் கூடுதலாக 20 ரன்களை எடுத்திருக்கலாம். எனினும் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்த ஸ்கோர் சவால் தரக்கூடியது தான் எங்கள் பந்துவீச்சாளர்கள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கடும் அழுத்தத்துக்கு ஆளாக்கினர். இரு அணிகளும் கடைசி வரை போராடின. பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது அவமானமாக உள்ளது. எனினும் இதுபோன்ற தருணங்கள் ஏற்படுவதை தடுக்க முடியாது. இது ஆட்டத்தின் ஒரு பகுதி தான். இதுபோன்ற நிலை மீண்டும் எப்போதும் ஏற்படக் கூடாது. நீஷம்-கப்டில் இருவரும் சூப்பர் ஓவரில் சிறப்பாக ஆடினர் சிறிய வித்தியாசத்தில் தோல்வியுற்றது மிகுந்த வேதனை தருகிறது.
இங்கிலாந்து அணியின் வெற்றிக்காக பாராட்டுகிறேன். சிறப்பாக ஆடிய அவர்களுக்கு கோப்பை சென்றது. பெரும்பாலான பிட்ச்கள் வித்தியாசமாக அமைந்ததால் 300-க்கு மேல் ஸ்கோர்களை அடிக்க முடியவில்லை. இறுதி ஆட்டம் சமனில் முடிவது மிகவும் வியப்பை ஏற்படுத்தியது. போட்டி முழுவதும் எங்கள் வீரர்கள் சிறப்பாக ஆடியும் முடிவு இதுபோன்று ஏற்பட்டது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த வேதனையை அப்படியே விழுங்கி விட முடியாது என்றார் கேன் வில்லியம்ஸன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com