டிஎன்சிஏ மகளிர் டி20 லீக் போட்டியில் யோஹன்யாவின் அபாரமான ஹாட்ரிக்கால் ரெட் ரேஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை காந்தி நகர் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மகளிர் லீக் போட்டி நடைபெற்றது. இதில் புளு அவெஞ்சர்ஸ் அணியை வொயிட் வாரியர்ஸ் அணி வென்றது. புளு அவெஞ்சர்ஸ் 10 ஓவர்களில் 45/5, வொயிட் வாரியர்ஸ் 8 ஓவர்களில் 48/3.
ரெட் ரேஞ்சர்ஸ் 5 ஓவர்களில் 83, நிரஞ்சனா 61, வெற்றி, யெல்லா சேலஞ்சர்ஸ் 14 ஓவர்களில் 64, (யோஹன்யா 6/7 ஹாட்ரிக் சாதனை).
சில்வர் ஸ்ட்ரைக்கர்ஸ் 15 ஓவர்களில் 94/5, வெற்றி (அர்ஷி செளதரி 30), கிரீன் இன்வேடர்ஸ் 15 ஓவர்களில் 85/6, (திருக்ஷ்காமினி 32).
16 வயதுக்குட்பட்டோர் போட்டி: சேலத்தில் நடைபெற்ற 16 வயதுக்குட்பட்டோர் ஒருங்கிணைந்த மாவட்டங்கள்-நகர அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் முதல் நாளான செவ்வாய்க்கிழமை ஒருங்கிணைந்த மாவட்டங்கள் அணி 90 ஓவர்களில் 247/9 ரன்களை எடுத்தது (சிபியந்தல் 135, ஜெயந்த் 64,) விக்னேஷ் 3-59.