சுடச்சுட

  
  drs

   

  இந்த வருட ரஞ்சி போட்டியில் டிஆர்எஸ் முறையை அறிமுகப்படுத்தவுள்ளது பிசிசிஐ.

  கடந்த வருட ரஞ்சி போட்டியில் நடுவர்களின் சில முடிவுகளில் சர்ச்சைகள் ஏற்பட்டன. இதையடுத்து இந்த வருடம் முதல் ரஞ்சி நாக் அவுட் ஆட்டங்களில் டிஆர்எஸ் முறையை பிசிசிஐ அமல்படுத்தவுள்ளது. எனினும் அதில் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

  ரஞ்சி போட்டியில் பயன்படுத்தப்படும் டிஆர்எஸ்-ஸில் ஹாக்-ஐ, அல்ட்ரா எட்ஜ் ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது. தொலைக்காட்சியில் அல்லது இணையத்தில் ஒளிபரப்பப்படும் ஆட்டங்களில் மட்டுமே டிஆர்எஸ் பயன்படுத்தப்படும் என்று பிசிசிஐயின் பொது மேலாளர் சபா கரீம் அறிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai