சுடச்சுட

  
  SindhuPV

  இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து.
  ஜகார்த்தாவில் நடைபெற்று வரும் பாட்மிண்டன் போட்டி காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பி.வி.சிந்து 21-14 என முதல் கேமை எளிதாக வென்றார். ஆனால் இரண்டாவது கேமை டென்மார்க் வீராங்கனை மியா பிளிச்பெல்ட் 17-21 என வென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிந்து மூன்றாவது கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி 21-11 என வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் மியாவுக்கு எதிராக சிந்து பெறும் 3-ஆவது வெற்றியாகும்.
  ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக்-சிராக் ஷெட்டி இணை 15-21, 14-21 என உள்ளூரைச் சேர்ந்த மார்கஸ்-கெவின் இணையிடம் வீழ்ந்தனர்,
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai