சுடச்சுட

  
  spt5

  திருச்சி விமானநிலையத்துக்கு வியாழக்கிழமை வந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பளு தூக்கும் வீராங்கனை புதுகையைச் சேர்ந்த அனுராதாவிற்கு அளிக்கப்பட்ட வரவேற்பு.

  ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் என்றார் காமென்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை அனுராதா. 
  ஆஸ்திரேலியாவில் 4 நாடுகள் பங்கேற்ற காமன்வெல்த் போட்டி கடந்த ஜூலை 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், இந்தியா சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், நெம்மேலிப்பட்டியைச் சேர்ந்த தமிழக காவல்துறை  உதவி ஆய்வாளர் அனுராதா பங்கேற்றார். 87 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு  221 கிலோ எடையைத் தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். சென்னையில் இருந்து திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த அனுராதாவிற்கு  பல்வேறு தரப்பினர் வரவேற்பு அளித்தனர்.  
  பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: சீனியர் பிரிவில் தமிழகத்திற்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் இது தான் என்பதில் பெருமை கொள்கிறேன். விவசாயக் குடும்பப் பின்னணியில் வந்தநான் இந்த நிலையை எட்டியுள்ளேன். தொடர்ந்து 2024 காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் வென்று அதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்று இந்தியாவிற்கு பதக்கம் வென்று தருவது எனது லட்சியம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai