சுடச்சுட

  

  இங்கிலாந்து-நியூஸிலாந்து இடையே நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவரின் போது நியூஸி. வீரர் ஜிம்மி நீஷத்தின் பள்ளிக் கால பயிற்சியாளர் உயிரிழந்தார்.
  சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சிக்ஸர் விளாசினார். அப்போது டிவியில் அதைப் பார்த்த அவரது பள்ளிக்கால பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் அதிர்ச்சியால் உயிரிழந்தார் எனத் தெரியவந்தது. 
  இதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ஜிம்மி நீஷம். என்னுடைய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், பயிற்சியாளராக இருந்து வழிகாட்டியவர். அவரின் கீழ் பயிற்சி பெற்றது பெருமைக்குரியது. அனைத்துக்கும் நன்றி என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai