டிஎன்பிஎல் 4-ஆவது சீசன்: திண்டுக்கல்லில் இன்று தொடக்கம்

டிஎன்பிஎல் 4-ஆவது சீசன்: திண்டுக்கல்லில் இன்று தொடக்கம்

சங்கர் சிமெண்ட்-டிஎன்பிஎல் 4-ஆவது சீசன் கிரிக்கெட் போட்டிகள் திண்டுக்கல் நத்தத்ததில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

சங்கர் சிமெண்ட்-டிஎன்பிஎல் 4-ஆவது சீசன் கிரிக்கெட் போட்டிகள் திண்டுக்கல் நத்தத்ததில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளும் காணும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. 
நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு தொடங்கும் போட்டியின் முதல் ஆட்டத்தை இந்திய ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவ் தொடங்கி வைக்கிறார்.
சேப்பாக் கில்லீஸ் அணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு இந்திய ஆல் ரவுண்டரான விஜய் சங்கர், உலகக் கோப்பையில் ஏற்பட்ட காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் 2 வாரங்களுக்கு அவரால் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஜய் சங்கர் கூறுகையில், 
காயத்தால் ஆடமுடியாமல் உள்ளது வேதனை தருகிறது. இந்திய அணியில் ஆடிய போது பெற்ற அனுபவங்களை, எங்கள் அணி வீரர்களிடம் பகிர்ந்துள்ளேன். இறுதி கட்ட ஆட்டங்களில் களமிறங்குவேன். கண்டிப்பாக பட்டம் வெல்வோம். எனக்கு பதிலாக கெளஷிக் காந்தி கேப்டனாக செயல்படுவார்.
முன்னணி வீரர்களான அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய் ஆகியோர் ஆடுவது டிஎன்பிஎல் போட்டிக்கு பெருமை சேர்க்கிறது. 
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆடி விக்கெட் வீழ்த்தியது மறக்க முடியாத அனுபவம். அந்த ஆட்டத்தில் திடீரென என்னை பந்துவீச அழைத்தனர் என்றார் சங்கர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com