புரோ கபடி லீக் 2019: அணிகள் ஒரு பார்வை

கிரிக்கெட் மட்டுமே இந்தியாவில் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ஏனைய விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் வகையில் கபடி, பாட்மிண்டன்,
புரோ கபடி லீக் 2019: அணிகள் ஒரு பார்வை


கிரிக்கெட் மட்டுமே இந்தியாவில் பொதுமக்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ள நிலையில் ஏனைய விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் வகையில் கபடி, பாட்மிண்டன், டேபிள்டென்னிஸ், கோ-கோ, மல்யுத்தம், வாலிபால், கூடைப்பந்து ஆட்டங்களுக்கும் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நமது நாட்டின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபடி ஆசிய விளையாட்டில் இடம் பெற்றுள்ளது. அதில் தொடர்ந்து தங்கம்வென்று வந்த இந்தியா கடந்த 2018 ஜகார்த்தா ஆசியப் போட்டியில் முதன்முறையாக தங்கத்தை ஈரானிடம் இழந்தது.

இந்நிலையில் கபடியை மேலும் மேம்படுத்தும் வகையில்  தொழில்முறை ரீதியிலான புரோ கபடி லீக் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கியது. 

தபாங் தில்லி, பெங்களூரு புல்ஸ், பெங்கால்வாரியர்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெயன்ட்ஸ், ஹரியணா ஸ்டீலர், ஹரியாணா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புணேரி பல்தான், தமிழ் தலைவாஸ், தெலுகு டைடன்ஸ், யு மும்பா, யுபி யோத்தாஸ் உள்ளிட்ட 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

தெலுகு டைட்டன்ஸ்-யு மும்பா மோதல்: 2019 சீசன் 7 போட்டிகள் வரும் ஜூலை 20-ஆம் தேதி ஹைதராபாத் கச்பெளலி மைதானத்தில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது யு மும்பா அணி.போட்டிகளில் பங்கேற்கும் 12 அணிகளும், வீரர்களும்:

ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ்: இதுவரை 6 சீசன்களில் மொத்தம் பங்கேற்ற 104 ஆட்டங்களில் 45 வெற்றி, 50 தோல்விகளை கண்டுள்ளது. 9 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றும், 4--ஆவது சீசனில் இரண்டாவது இடத்தையும் பெற்றது ஜெய்ப்பூர். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய போது எல்லாம் இறுதிச் சுற்றில் நுழைந்தது அந்த அணி. 

கேப்டன்: தீபக் ஹூடா (ரைடர்)196 புள்ளிகள். முக்கிய வீரர்கள் நிலேஷ் சலுன்கே, தீபக் நர்வால், அஹிங்கிய பவார், நிதின் ரவால், சந்தீப் துல், அமித்ஹூடா, விஷால், சுனில் சித்கவலி. அதிகபட்சமாக ரூ.1.26 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார் தீபக் ஹூடா. சிறந்த ரைடிங் வீரர்களை கொண்டுள்ள ஜெய்ப்பூர் அணியில் எதிரணி வீரர்களை மடக்க தேவையான பலம் இல்லை.

பாட்னா பைரேட்ஸ்: பிகேஎல் சீசன் 3 முதல் 5 வரை ஹாட்ரிக் சாம்பியன் பட்டங்களை வென்றது. எனினும் கடந்த 6-ஆவது சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கே முன்னேறவில்லை. மொத்தம் ஆடிய 112 ஆட்டங்களில், 62 வெற்றி, 38 தோல்வியை கண்டுள்ளது. 12 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. 

பர்தீப் நர்வால் (858 ரைட் புள்ளிகள்) முக்கிய வீரராக உள்ளார். முக்கிய வீரர்கள் ஜங்குன் லீ, சுரேந்த் நடா, நீரஜ் குமார், ஹாடி, ஜவஹர், முகமது இஸ்மாயில், ஜெய்தீப். அதிகபட்சமாக ரூ.77.3 லட்சத்துக்கு தக்க வைக்கப்பட்டார் பர்தீப் நர்வால். சுரேந்தர் நடா ரூ.77 லட்சத்துக்கும், ஜங்குன் லீ 40 லட்சத்துக்கும் வாங்கப்பட்டனர். பர்தீப் மட்டுமே ரைடிங்கில் ஈடுபடுகிறார். அவருக்கு துணையாக ரைடர்கள் இல்லாதது பலவீனமாகும். தற்காப்பும் போதிய அளவு வலுவின்றி உள்ளது.

புணேரி பல்தான்: 6 சீசன்களில் அதிகபட்சமாக 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது புணேரி. மொத்தம் 106 ஆட்டங்களில் 43 வெற்றி, 55 தோல்விகளை கண்டுள்ளது. 8 ஆட்டங்கள் சமனில் முடிந்தன. அணியின் நட்சத்திர வீரர் நிதின் டோமர் (ரைடர்), இதர முக்கிய வீரர்கள்-மஞ்சித், தர்ஷன் கடியன், பவன் கடியன், சுர்ஜீத் சிங் (கேப்டன்), கிரீஷ் மாருதி எர்னாக், சாகர் பி கிருஷ்ணா, அமித்குமார், தீபக் யாதவ், 

கடந்த சீசனில் ஓய்வு பெற்ற பிரபல வீரர் அனுப்குமார், தற்போது புணேரி பயிற்சியாளராக உள்ளார்.  அதிகபட்சமாக ரூ.1.2 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார் நிதின் டோமர். மஞ்சித் ரூ.62 லட்சத்துக்கும், சுர்ஜீத் சிங் ரூ.56 லட்சத்துக்கும் வாங்கப்பட்டனர். புணேயின் தற்காப்பு பலமாக உள்ளது. ரைடிங் பிரிவும் சரிவிகித அளவில் உள்ளது. 

தமிழ் தலைவாஸ்: சீசன் 5-இல் அறிமுகமான தமிழ் தலைவாஸ், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. மொத்தம் 102 ஆட்டங்களில் பங்கேற்று 31 வெற்றி, 64 தோல்விகளை கண்டுள்ளது தலைவாஸ். நட்சத்திர வீரர் கேப்டன் அஜய் தாகுர். இதர முக்கிய வீரர்கள் மஞ்சித் சில்லார், சுகேஷ் ஹெக்டே, ஜஸ்வீர் சிங், ராகுல் செளதரி, மொஹித் சில்லார். 

ரூ.95 லட்சத்துக்கு வாங்கப்பட்ட ராகுல் செளதரி, அஜய் தாகுருடன் சிறந்த ரைடர்கள் திகழப் போகின்றனர். அஜய் தாகுர் ரூ.84 லட்சம், ரன் சிங் ரூ.55 லட்சம், மொஹித் சில்லார் ரூ.45 லட்சம். 

பல்வேறு வீரர்களை தருவித்து அணியை பலப்படுத்தியுள்ளனர். ராகுல்-அஜய் இணையை பிரிக்க முடியாது. மூத்த வீரர்களின் பார்ம் குறைந்து விட்டது எரிச்சலாக உள்ளது.

தெலுகு டைட்டன்ஸ்: 6 சீசன்களிலும் இடம் பெற்று ஆடியுள்ள தெலுகு டைடன்ஸ் 2 மற்றும் 4-ஆவது சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதுவரை மொத்தம் 104 ஆட்டங்களில் 45 வெற்றி, 47 தோல்விகளை கண்டுள்ளது. 13 ஆட்டங்களில் சமனில் முடிந்தன. நட்சத்திர வீரர் சித்தார்த் தேசாய். இதர முக்கிய வீரர்கள் விஷால் பரத்வாஜ், அபோஹர் மிகானி, பர்ஹாத் மிலாஹர்தான். சுரேஷ் தேசாய், அர்மான், அருண்.

அதிகபட்சமாக சித்தார்த் தேசாய் ரூ.1.45 கோடிக்கு வாங்கப்பட்டார். விஷால் பரத்வாஜ் 60 லட்சத்துக்கும், அபோஹர் மிகானி 75 லட்சத்துக்கும் வாங்கப்பட்டனர். புதிய பயிற்சியாளராக ஈரானின் மஸான் தாரனி நியமிக்கப்பட்டது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷால் பரத்வாஜ், அபோஹர் மிகானி ஆகியோர் கார்னர் பிரிவில் சிறப்பாக ஆடுகின்றனர் . தற்காப்பும் பலவீனமாகவே உள்ளது.

யு மும்பா: முதல் சீசன் முதல் 6-ஆவது சீசன் வரை பங்கேற்று நிலையாக ஆடி வரும் அணி யு மும்பா. முதல்  3 சீசன்களிலும் இறுதிச் சுற்றில் நுழைந்த மும்பா அணி 2-ஆவது சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. 4, 5 சீசன்கள் தவிர ஏனைய அனைத்து öசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கடந்த சீசனில் எலிமினேட்டர் 1-இல் தோல்வியுற்றனர். மொத்தம் 107 ஆட்டங்களில் ஆடி, 68 வெற்றி, 33 தோல்விகளை கண்டுள்ளது. 6 ஆட்டங்கள் சமனில் முடிந்தன.

நட்சத்திர வீரர் கேப்டன் ஈரானின் பேஸல் அத்ரச்சளி ((சிறந்த டிபன்டர்). முக்கிய வீரர்கள்-சுரேந்தர் சிங், ரோஹித் பாலியன், டோங் லீ, அபிஷேக் சிங், ராஜகுரு சுப்பிரமணியன், அதுல், சந்தீப் நர்வால். அதிகபட்சமாக பேஸல் அத்ரச்சளி ரூ.1.1 கோடிக்கு தக்க வைக்கப்பட்டாரர் சந்தீப் நர்வால் ரூ.89 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.

தற்காப்பே யு மும்பாவின் பிரதான பலமாகும். கார்னில் ஆடுவதிலும் சிறப்பாக உள்ளது. சிறந்த ரைடர்கள் இல்லாதது பலவீனம். சித்தார்த் தேசாய் வெளியேறியது வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com