மே.இ.தீவுகள் தொடரில் இருந்து தோனி விலகல்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.
மே.இ.தீவுகள் தொடரில் இருந்து தோனி விலகல்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்திய, மே.இ.தீவுகள் இடையே அமெரிக்கா மற்றும் மே.இ.தீவுகளில் தலா 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் நடக்கின்றன. 

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியின் ஒரு பகுதியாக 2 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் ஆக. 22-இல் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை தேர்வு செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், ராணுவ நடவடிக்கைகளில் அடுத்த 2 மாதங்களுக்கு ஈடுபட விரும்புவதால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக மகேந்திர சிங் தோனி சனிக்கிழமை அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிசிசிஐ தரப்பில் கூறுகையில், இங்கு 3 விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறோம். முதலாவது தோனி ஓய்வுபெறவில்லை, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக 2 மாதகாலம் விடுப்பு எடுத்துள்ளார் மற்றும் தோனி தொடர்பாக அடுத்தகட்ட முடிவு எடுக்கும் அதிகாரம் கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் ரித்திமான் சாஹாவுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com