திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய டிஎன்பிஎல் 4-ஆவது சீசன் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.
திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

திண்டுக்கல் அடுத்த நத்தத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய டிஎன்பிஎல் 4-ஆவது சீசன் தொடக்க ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது திண்டுக்கல் டிராகன்ஸ்.

முதலில் ஆடிய திண்டுக்கல் 115/9 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய சேப்பாக் கில்லீஸ் 105/9 ரன்களை எடுத்து தோல்வியுற்றது.

திண்டுக்கல் டிரான்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன்களை சேர்த்தது. ஜெகதீசன் 17, கேப்டன் அஸ்வின் 37, சதுர்வேதி 21 ரன்களை விளாசினர். சென்னை தரப்பில் அலெக்சாண்டர் 3-11, எம்.அஸ்வின் 2-15 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரண்டாவதாக ஆடிய சேப்பாக் அணியில் ஆரீப் 16, எம்.அஸ்வின் 16, ஹரிஷ்குமார் 15, சசிதேவ் 13 ரன்களை எடுத்தனர். திண்டுக்கல் தரப்பில் சிலம்பரசன் 4-13, கெளஷிக் 2-14, முகமது 2-21 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

திண்டுக்கல் டிராகன்ஸ்-சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் இடையிலான முதல் ஆட்டத்தை  தொடங்கி வைத்து கேதார் ஜாதவ் கூறியதாவது:

இளம் வீரர்களை ஊக்குவிக்கும் தளமாக உள்ளது டிஎன்பிஎல். இதன் மூலம் ஐபிஎல், ரஞ்சி போன்ற பெரிய போட்டிகளில் ஆடவும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. டிஎன்பிஎல் மூலம் அடையாளம் காணப்பட்ட ஜெகதீசன், சிஎஸ்கே அணியில் சேர்க்கப்பட்டு சிறப்பாக ஆடினார். நான் உலகக் கோப்பையில் சரிவர ஆடவில்லை. எனினும் வாழ்க்கை நமக்கு பல்வேறு பாடங்களை கற்பிக்கிறது என்றார் ஜாதவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com