ஒரு கையில் பந்துவீசிய அஸ்வின்

நட்சத்திர ஆல்-ரவுண்டர் அஸ்வின், டிஎன்பிஎல் லீக் போட்டியில் ஒரு கையில் பந்துவீசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
ஒரு கையில் பந்துவீசிய அஸ்வின்

நட்சத்திர ஆல்-ரவுண்டர் அஸ்வின், டிஎன்பிஎல் லீக் போட்டியில் ஒரு கையில் பந்துவீசி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

புதுப்புது மாற்றுச் சிந்தனைகளுடன் களத்தில் செயல்படக்கூடியதில் அஸ்வின் கில்லாடி. இதற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 'மான்கட்' முறை ரன்-அவுட் உத்தியைப் பயன்படுத்தியது இதற்கு எடுத்துக்காட்டாகும். கிரிக்கெட் விதிகளின்படி அது சரியென்றாலும், அஸ்வினின் இந்த செயல் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், டிஎன்பிஎல் முதல் போட்டியிலேயே ஒரு கையில் பந்துவீசியதன் மூலம் அஸ்வின் புதிய சர்ச்சையை தற்போது ஏற்படுத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை நடைபெற்ற நடப்பு டிஎன்பிஎல் சீசனின் முதல் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை சந்தித்து. 

இதில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், சேப்பாக் அணிக்கு கடைசி 2 பந்தில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்த வகை பந்துவீச்சு முறையை பயன்படுத்தினார். இதனால் பேட்ஸ்மேன் மட்டுமல்லாது மைதானத்தில் மற்றும் தொலைக்காட்சியில் இப்போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கிரிக்கெட் விதிகளின் படி பந்துவீசும் கை மட்டும் முறையாக சுழல வேண்டும். அதனடிப்படையில் தனது இடதுகையை எவ்வித செயல்பாடுகளும் இன்றி ஒரே நிலையில் வைத்துக்கொண்டு, வலதுகையை மட்டும் பயன்படுத்தி பந்துவீசினார். இதற்கு அடுத்த பந்தை கேதர் ஜாதவ் போன்று வீசினார். இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com