4 நாள் லார்ட்ஸ் டெஸ்ட்: இங்கிலாந்து - அயர்லாந்து நாளை மோதல்!
By எழில் | Published on : 23rd July 2019 05:54 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு நாள் டெஸ்ட் ஆட்டத்தை நாளை முதல் விளையாடவுள்ளது அயர்லாந்து அணி.
அந்த அணி விளையாடவுள்ள 3-வது டெஸ்ட் இது. இதுவரை விளையாடிய இரு டெஸ்டுகளிலும் அயர்லாந்து அணி தோல்வியடைந்துள்ளது.
இங்கிலாந்து அணியிலிருந்து காயம் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகியுள்ளார். இதனால் ஆகஸ்ட் 1 அன்று தொடங்கவுள்ள ஆஷஸ் டெஸ்டில் அவர் விளையாடுவது சந்தேகம் எனத் தெரிகிறது. பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. நாளைய ஆட்டத்தில் ஜேசன் ராய் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகவுள்ளார். ராய் - பர்ன்ஸ் தொடக்க வீரர்களாகக் களமிறங்குவார்கள்.