Enable Javscript for better performance
அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கக் கூடாது: தேர்வாளர்கள் மீது கங்குலி சாடல்- Dinamani

சுடச்சுட

    

    அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கக் கூடாது: தேர்வாளர்கள் மீது கங்குலி சாடல்

    By DIN  |   Published on : 25th July 2019 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Ganguly


    ஒரு போட்டியில் விளையாடுவதற்கு அணிக்குத் தேவையான வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமே தவிர, அனைவரையும் மகிழ்விக்க முயற்சிக்கக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களை முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி சாடியுள்ளார். 
    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அஜிங்க்ய ரஹானே, சுப்மன் கில் ஆகியோர் விடுபட்டத்தை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். 
    இதுதொடர்பாக சுட்டுரையில் புதன்கிழமை பதிவிட்ட அவர், அணியிலுள்ள வீரர்களை ஒவ்வொரு ஃபார்மட்டுக்குமாக மாற்றாமல், அனைத்து ஃபார்மட்களிலும் விளையாட ஒரே வீரர்களை தேர்வாளர்கள் தேர்வு செய்ய வேண்டும். 
    அப்போது தான் அணியில் வீரர்களிடையே ஒத்திசைவும், நம்பிக்கையும் ஏற்படும். ஆனால், ஒரு சில வீரர்களே அவ்வாறு அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட தேர்வு செய்யப்படுகின்றனர். 
    சிறந்த அணிகள் யாவும் நிலையான வீரர்கள் வரிசையைக் கொண்டுள்ளன. தேர்வாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்காமல், அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டும். வீரர்கள் தேர்வில் நிலையான கொள்கையை கொண்டிருக்க வேண்டும். 
    மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் இடம்பெற்றுள்ள பல வீரர்கள் அனைத்து ஃபார்மட்களிலும் விளையாடக் கூடியவர்கள். ஆனால், ஒருநாள் தொடருக்கான அணியில் அஜிங்க்ய ரஹானே, சுப்மன் கில் இல்லாதது ஆச்சர்யமளிக்கிறது என்று கூறியுள்ளார். 
    ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு, எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வுக் குழு இந்திய வீரர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அதில், சிறப்பாக ஆடி வரும் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பளிக்கப்படாமல், நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாத கேதார் ஜாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  கோலி, ரோஹித், ராகுல், ஜடேஜா தவிர வேறு எந்த வீரர்களும் 3 ஃபார்மட்களுக்குமான அணிகளில் இடம்பெறவில்லை.
    ஏமாற்றம் அடைந்தேன்
    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் தான் தேர்வு செய்யப்படாததை எண்ணி நேரத்தை வீணடிக்கப்போவதில்லை என்று சுப்மன் கில் கூறியுள்ளார். 


    மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு இந்திய சீனியர் அணி அறிவிக்கப்பட்டபோது எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால், எந்தவொரு போட்டிக்கான அணியிலும் எனது பெயர் இடம்பெறாதது ஏமாற்றமளித்தது. எனினும், அதை எண்ணிக்கொண்டு நேரத்தை வீணடிக்கப்போவதில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடி தேர்வாளர்களின் அங்கீகாரத்தைப் பெற முயற்சிப்பேன் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai