Enable Javscript for better performance
இன்று தொடங்குகிறது அல்டிமேட் டேபிள் டென்னிஸ்- Dinamani

சுடச்சுட

    
    utt


    அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சீசன் வியாழக்கிழமை தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான தபாங் தில்லி, புணேரி பல்தான் அணியை எதிர்கொள்கிறது. 
    இந்திய நட்சத்திர வீரர்களான ஜி.சத்தியன், சரத் கமல், வீராங்கனை மணிகா பத்ரா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் பலர் பங்கேற்கும் இந்தப் போட்டி அடுத்த 3 வாரத்துக்கு நடைபெறவுள்ளது. போட்டி முடிவில் ரூ.2 கோடி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன. 
    இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 6 அணிகளில், புணேரி பல்தான், சென்னை லயன்ஸ், யு மும்பா ஆகிய அணிகள் முதல்முறையாகக் களம் காண்கின்றன. ஒவ்வொரு அணிகளுக்கான ஆட்டமும் கடந்த ஆண்டை விட 2 குறைக்கப்பட்டு தலா 5 ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திலும் 3 கேம்கள் நடைபெறும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai