Enable Javscript for better performance
இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுருசிங்கே பதவி விலக வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் ஹதுருசிங்கே பதவி விலக வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 25th July 2019 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    hathutusinghey


    இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கே பதவியை ராஜிநாமா செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. 
    தற்போது நடைபெற்று வரும் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்குப் பிறகு ராஜிநாமா செய்யுமாறு, இலங்கை கிரிக்கெட் வாரிய செயலர் மோகன் டி சில்வா அவருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 
    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் மோசமான செயல்பாட்டை அடுத்து ஹதுருசிங்கேவுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. உலகக் கோப்பை போட்டியில் தொடக்க சுற்றில் 3 ஆட்டங்களில் மட்டுமே வென்ற இலங்கை, அரையிறுதிக்கு தகுதிபெறத் தவறியது. 
    வங்கதேச கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து கடந்த 2017-ஆம் ஆண்டு விலகிய பிறகு, இலங்கை அணியின் பயிற்சியாளராக ஹதுருசிங்கே பொறுப்பேற்றார். 
    எனினும், அவர் பயிற்சியின் கீழ் விளையாடிய இலங்கை, உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக பங்கேற்ற 20 ஒருநாள் ஆட்டங்களில் 13-இல் தோல்வி அடைந்தது. இதனால் ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையிலும் பின்தங்கியது. 
    இந்நிலையில், இலங்கை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலக இருக்கும் ஹதுருசிங்கே, மீண்டும் வங்கதேச அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச அணியின் தற்போதைய பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸை அந்த அணி நிர்வாகம் நீக்கம் செய்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai