Enable Javscript for better performance
இலங்கை பந்துவீச்சாளர் நுவன் குலசேகரா ஓய்வு- Dinamani

சுடச்சுட

    
    nuwan


    இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகரா (37) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். 
    இலங்கை அணிக்காக கடந்த 15 ஆண்டுகள் விளையாடிய குலசேகரா, 184 ஒருநாள் ஆட்டங்களில் 199 விக்கெட்டுகளும், 58 டி20 ஆட்டங்களில் 66 விக்கெட்டுகளும், 21 டெஸ்ட் ஆட்டங்களில் 48 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 
    சமிந்தா வாஸ், லசித் மலிங்கா ஆகியோர் வரிசையில் அதிகபட்ச விக்கெட்டுகள் வீழ்த்திய 3-ஆவது இலங்கை வீரர் என்ற பெருமை உடையவர் குலசேகரா. 
    கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணி கோப்பை வென்ற உலக டி20 போட்டியில், குலசேகரா 6 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 
    கடந்த 2013-ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் 22 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே ஒரு ஆட்டத்தில் குலசேகராவின் அதிகபட்சமாகும். 
    கடைசியாக கடந்த 2017 ஜூலையில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடிய இலங்கை அணியில் குலசேகரா இடம்பிடித்திருந்தார். 2018 மார்ச் மாதத்துக்குப் பிறகு அவர் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை. 
    கடந்த 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதியபோது, குலசேகரா வீசிய பந்தில் தோனி சிக்ஸர் விளாசி இந்தியாவை சாம்பியன் ஆக்கியது நினைவுகூரத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai