Enable Javscript for better performance
செய்திகள் சில வரிகளில்...- Dinamani

சுடச்சுட

    

        இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சண்டிகா ஹதுருசிங்கே பதவியை ராஜிநாமா செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது. 
        இந்திய கிரிக்கெட் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தென்னாப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளார். 
        பிரெசிடென்ட்ஸ் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் மோனிகா 48 கிலோ பிரிவில் இறுதிச்சுற்றுக்கும், ஜமுனா போரோ (54 கிலோ), நீரஜ் ஸ்வாமி (49 கிலோ), தினேஷ் தாகர் (69 கிலோ) ஆகியோர் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறினர். 
        அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் குணேஸ்வரன் முதல் சுற்றிலேயே 7-6(7/4), 5-7, 0-6 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சூன்வூ குவோனிடம் வீழ்ந்தார். 
        இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக டபிள்யூ.வி. ராமன் நியமிக்கப்பட்டதை மறுஆய்வு செய்யுமாறு பிசிசிஐ நெறிமுறைகள் அதிகாரி டி.கே. ஜெயினுக்கு பிசிசிஐ நிர்வாகிகள் குழு (சிஓஏ) அறிவுறுத்தியுள்ளது. 
        யூரோ ஹாக்கி லீக் போட்டியில் நெதர்லாந்து கிளப் அணியான ஹெச்ஜிசி-க்காக விளையாட இந்திய ஹாக்கி வீரர்கள் தேவிந்தர் வால்மிகி, ஹர்ஜீத் சிங் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். 
        2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆர்ஜெண்டீனாவின் முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
        ரஷிய குத்துச்சண்டை வீரரான மேக்ஸிம் ததாஷெவ், பியூர்டோ ரிகா வீரர் சப்ரியெல் மடியாஸுக்கு எதிரான போட்டியின்போது மூளையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். 
        யோகாசனங்களுக்கு விளையாட்டு அந்தஸ்து கொடுப்பதற்காக ஆயுஷ் அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. 
        14 வயதுக்கு உள்பட்ட டென்னிஸ் வீரர்கள் 16 பேருக்கு அடுத்த ஓராண்டுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகையை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வழங்க உள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai