Enable Javscript for better performance
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: சிந்து, பிரணாய் முன்னேற்றம்- Dinamani

சுடச்சுட

    
    SindhuV


    ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர். 
    மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சிந்து, முதல் சுற்றில் சீனாவின் ஹான் யூவை 21-9, 21-17 என்ற செட்களில் வீழ்த்தினார். அடுத்த சுற்றில் ஜப்பானின் அயா ஒஹோரியை அவர் எதிர்கொள்கிறார். 
    இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரணாய் முதல் சுற்றில், சக இந்தியரும், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்தவருமான ஸ்ரீகாந்த்தை 13-21, 21-11, 22-20 என்ற செட்களில் போராடி வென்றார். மற்றொரு முதல் சுற்றில் இந்தியரான சமீர் வர்மா 17-21, 12-21 என்ற செட்களில் டென்மார்க்கின் ஆன்டர்ஸ் ஆன்டன்சென்னிடம் தோல்வி கண்டார். 
    ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி/சிரக் ஷெட்டி இணை 21-16, 21-17 என்ற செட்களில் இங்கிலாந்தின் மார்கஸ் எலிஸ்/கிறிஸ் லான்கிரிட்ஜ் ஜோடியை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியது. எனினும், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி ஜோடி 16-21, 14-21 என்ற செட்களில் தென் கொரியாவின் யோங் கிம் கொரியா/ஹீ யாங் காங் இணையிடம் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறியது. 
    கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா/சிக்கி ரெட்டி இணை 11-21, 14-21 என்ற செட்களில் சீனாவின் ஜென்ட் சி வெய்/ஹுவாங் யா கியாங் ஜோடியிடம் தோல்வி கண்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai