Enable Javscript for better performance
டிஎன்பிஎல்: காரைக்குடியை வென்றது காஞ்சி- Dinamani

சுடச்சுட

    
    sanjay

    பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சஞ்சய்.

    தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் விபி காஞ்சி வீரன்ஸ் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐடிரீம் காரைக்குடி காளை அணியை வீழ்த்தியது. 
    திண்டுக்கல்லில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காஞ்சி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 
    அடுத்து ஆடிய காரைக்குடி, 14.4 ஓவர்களில் 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காஞ்சி வீரர் சதீஷ் ஆட்டநாயகன் ஆனார். 
    முன்னதாக டாஸ் வென்ற காரைக்குடி அணி பந்துவீசத் தீர்மானித்தது. பேட்டிங் செய்த காஞ்சி அணியில் தொடக்க வீரர் விஷால் வைத்தியா 27 ரன்கள் சேர்த்தார். உடன் வந்த முகிலேஷ் டக் அவுட்டானார். 
    பின்னர் வந்த சஞ்சய் யாதவ் 7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என காரைக்குடி பந்துவீச்சை சிதரடித்து 95 ரன்களுக்கு வீழ்ந்தார். கேப்டன் பாபா அபராஜித் 19 ரன்கள் சேர்க்க, இறுதியாக சதீஷ் 31 ரன்களுடனும், பிரான்சிஸ் ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
    காரைக்குடி தரப்பில் சுனில் சாம் 2, லஷ்மண், மோகன் பிரசாத் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். 
    இதையடுத்து 178 ரன்களை இலக்காகக் கொண்டு இன்னிங்ஸை தொடங்கிய காரைக்குடி அணியில் அதிகபட்சமாக சூர்யபிரகாஷ், ஷாஜகான் தலா 12 ரன்கள் அடித்தனர். 
    எஞ்சியவர்களில் ஆதித்யா 10, ஸ்ரீனிவாசன் 4, ராஜ்குமார் 8, சாம் 9, லஷ்மண் 2 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் அனிருத்தா, மான் பாஃப்னா, மகேஷ் ஆகியோர் டக் அவுட்டாகினர். 
    காஞ்சி தரப்பில் சதீஷ் 4, கெளதம் 2, சுதேஷ், சஞ்சய், ஹரிஷ் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai