Enable Javscript for better performance
டெஸ்டிலும் ஜேசன ராய் அதிரடி: இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலை- Dinamani

சுடச்சுட

    

    டெஸ்டிலும் ஜேசன் ராய் அதிரடி: இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலை

    By DIN  |   Published on : 25th July 2019 09:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Jason_Roy

    நன்றி: டிவிட்டர்/ஐசிசி


    அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. 

    இங்கிலாந்து, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு டெஸ்ட் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அயர்லாந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 85 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து அணி  207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் முன்னிலை வகித்தது. 

    இதன்பிறகு, இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தில் ஒரு ஓவர் விளையாட நேரிட்டது. இதனால், தொடக்க ஆட்டக்காரராக முதல் இன்னிங்ஸில் 11-வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஜேக் லீச் நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் இழக்காமல் இருந்தது.  

    122 பின்தங்கிய நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி நெருக்கடியுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, நைட் வாட்ச்மேன் லீச் உடன் ஜேசன் ராய் இணைந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்தனர். லீச் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். ராய் துரிதமாக விளையாடி அரைசதம் அடித்தார். 

    இந்த இணை 2-வது விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்த நிலையில் ராய் 72 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லீச் 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி மீண்டும் சரிவைச் சந்தித்தது.

    டென்லி 10 ரன்களுக்கும், பேர்ஸ்டோவ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்மூலம், 2-வது நாள் ஆட்டம் தேநீர் இடைவெளியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 12 ரன்களுடனும், மொயீன் அலி 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 87 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai