Enable Javscript for better performance
புரோ கபடி லீக்: யு.பி.யை வீழ்த்தியது பெங்கால்- Dinamani

சுடச்சுட

    
    pr

    யு.பி. யோதா வீரர்களை அருமையாக அவுட்டாக்கிய பெங்கால் வீரர்.


    புரோ கபடி லீக் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற 7-ஆவது ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 48-17 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை வீழ்த்தியது. 
    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பெங்கால் 24 ரைடு புள்ளிகள், 14 டேக்கிள் புள்ளிகள், 8 ஆல் அவுட் புள்ளிகள், 2 உதிரி புள்ளிகள் பெற்றது. யோதா அணி 10 ரைடு புள்ளிகள், 5 டேக்கிள் புள்ளிகள், 2 உதிரி புள்ளிகள் பெற்றது. 
    பெங்கால் தரப்பில் அதிகபட்சமாக ரைடர் முகமது நபிபக்ஷ் 10 புள்ளிகளும், தடுப்பாட்ட வீரர் பல்தேவ் சிங் 7 புள்ளிகள் வென்றனர். யோதா தரப்பில் அதிகபட்சமாக ரைடர் மோனு கோயத் 5 புள்ளிகளும், தடுப்பாட்ட வீரர் நிதேஷ் குமார் 2 புள்ளிகளும் வென்றனர். 
    தில்லி த்ரில் வெற்றி: அடுத்து நடைபெற்ற 8-ஆவது ஆட்டத்தில் தபங் தில்லி கே.சி. அணி 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. 
    இந்த ஆட்டத்தில் தில்லி 23 ரைடு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 2 உதிரி புள்ளிகள் பெற்றது. தெலுகு அணி 27 ரைடு புள்ளிகள், 6 டேக்கிள் புள்ளிகள் பெற்றது. 
    தில்லி அணியில் அதிகபட்சமாக ரைடர் நவீன் குமார் 14 புள்ளிகளும், தடுப்பாட்ட வீரர் ஜோகிந்தர் நர்வால் 4 புள்ளிகள் வென்றனர். தெலுகு அணியில் அதிகபட்சமாக ரைடர் சுரேஷ் தேசாய் 18 புள்ளிகளும், தடுப்பாட்ட வீரர் விஷால் பரத்வாஜ் 4 புள்ளிகளும் வென்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai